Monday 28 April 2014

தொடர் - 4

“ஜென்மம் னா  என்ன அரவிந்த்?” – பொம்மு
“என் அம்மா சொல்லுவாங்க ஜென்மம் னா ஒரு மனிஷனோட ஒரு பிறவி காலம்னு” – அரவிந்த்
“பிறவி காலமா?” – பொம்மு
“ஆமா மனிஷனோட ஒரு பிறவிக்கான வாழ்நாள் தான் அது....ஒவ்வொரு மனிஷனுக்கும் 7 ஜென்மங்கள் இருக்கு..” – அரவிந்த்.
“7 ஜென்மம்...இதெல்லாம் உண்மையா?”– பொம்மு
“நடக்குற சம்பவங்கள வச்சு பாக்கும் போது இதெல்லாம் நம்பி தான் ஆகணும் பொம்மு.” –அரவிந்த்
இப்படியே பொம்முவும் அரவிந்தும் பேசிக் கொண்டே அந்த பயங்கர காட்டில் நீண்ட தூரம் கடந்து வந்துக் கொண்டிருந்தனர். அந்த காட்டில் ஏதேதோ வித்யாசமான சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. மாதவனும் அவர்களிடம் வந்து சேரவில்லை. அவர்களுக்கு வழிக்காட்டி முன்னே செல்லும் கருப்பு நாய் பைரவன் தான் இப்போது அவர்களுக்கு துணை.
“அந்த மாதவன் இன்னும் வரல....என்னால ரொம்ப தூரம் நடக்க முடியாது...எனக்கு தாகமா இருக்கு ” என்று அரவிந்த் சோர்ந்து போய் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தான்.
“இரு நான் போய் பக்கத்துல எதாவது தண்ணி கிடைக்குதான்னு பாத்துட்டு வரேன்!” என்று பொம்மு அங்கிருந்து விலகி சென்றாள். பைரவன் அரவிந்த் அருகில் அமர்ந்தது.
பொம்மு சுற்றி சுற்றி தேடியபடி சிறிது தூரம் சென்றாள். அங்கே ஒரு இடத்தில் ஒரு ஆச்சர்யம் அவள் கண்டாள். ஒரு அழகான மரத்தில் அதன் துவாரத்தில் இருந்து அருவி போல நீர் ஊற்றிகொண்டு இருந்தது.
அந்த தண்ணீர் மரத்தின் அடியில் சென்றாள் பொம்மு. தண்ணிரில் விளையாடினாள். அங்கே கிழே இருந்த ஒரு கொட்டங்குச்சியை எடுத்து அதில் தண்ணிரை நிரப்பிக் கொண்டிருந்தாள்.
“மாமிசம்...மாமிச வாசனை ரொம்ப நாள் கழிச்சு எனக்கு வருது! இங்க தான் பக்கத்தில் எங்கோ இருக்கு..” என்று ஒரு வினோத குரல் கேட்டு பொம்மு மரத்தின் பின்னே எட்டி பார்த்தாள்.
சற்று தூரத்தில் இரண்டு வினோத உருவங்களை கண்டாள் பொம்மு. மனிதனின் ளவுதான் இருந்தன. ஆனால் கால்கள் இல்லாமல் காற்றில் மிதந்து வந்துக் கொண்டிருந்தது. இரண்டு சிவப்பு கண்கள், மேல்நோக்கி வீசும் கூந்தல், கருமை நிற உடல், நீண்ட கோர பற்கள் என்று அவை பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அந்த வினோத உருவங்கள் அரவிந்தின் திசை நோக்கி மிதந்து கொண்டிருந்தனர். பொம்மு அந்த பயத்திலேயே கொட்டாங்குச்சியை கிழே போட அந்த சத்தத்தில் அந்த வினோத பேய்கள் பொம்முவை சட்டென கண்டு பிடித்தனர். பொம்மு உடனே ஓட ஆரம்பித்தாள். அந்த வினோத உருவங்கள் வெறித்தனமாக அவளை துரத்தி வந்தனர். பொம்மு அரவிந்தின் திசை பக்கம் தேடி ஓடினாள். இறுதியாக துரத்தில் அரவிந்த் பைரவனுடன் அமர்ந்திருப்பதை கண்டாள் பொம்மு.
“அரவிந்த்...ஓடு! ஓடு!” என்று கத்தியபடி அவனிடம் நோக்கி ஓடிவந்தாள். அரவிந்த் அந்த உருவங்கள் அவளை துரத்துவதை அதிர்ச்சியுடன் கண்டு எழுந்தான். பைரவன் சீறி பாய்ந்து அந்த வினோத உருவங்களிடம் சண்டை  போட ஆரம்பித்தது. பொம்மு அரவிந்திடம் தாவினாள்.அரவிந்த் போம்முவை தூக்கி கொண்டு எங்கோ ஒரு திசையை நோக்கி ஓட ஆரம்பித்தான். ஒரு உருவம் பைரவனிடம் சண்டை போடா இன்னொரு உருவம் அரவிந்தை துரத்தி வந்தது. அரவிந்த் நீண்ட நேரம் அந்த உருவத்தின் சிக்காமல் ஓட திடிரென அந்த உருவத்திடம் சிக்கும் நேரம் வந்தது.. அரவிந்தின் காலை கவ்வியது அந்த உருவம் உடனே அரவிந்த் பொம்முவுடன் மண்ணில் விழுந்து புரண்டான். அந்த உருவம் தன கோர வாயை திறந்த படி அரவிந்தை நோக்கி வந்தது. பொம்மு அந்த உருவத்தை தடுக்க வர அடகு ஒரே அடியில் பொம்மு தூர போய் விழ செய்தது. அரவிந்த் பயத்தில் உறைந்து போனான். அந்த உருவன் வேகமாக அரவ்விந்தை நோக்கி வந்தது. திடிரென குறுக்கே பாய்ந்த பைரவன் அந்த உருவத்தின் முகத்தை தாக்கியது. பைரவன் வாயில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
நீண்ட நேரம் பைரவனும் அந்த உருவமும் சண்டை போட்டு கொண்டிருக்க சட்டென அங்கே விரைந்த மற்றொரு வினோத உருவம் பைரவனின் கழுத்தை வாயால் கவ்வியது. பொம்முவும் அரவிந்தும் செய்வதறியாமல் பதட்டத்துடன் நின்றனர். அந்த உருவம் மேலும் மெல்லும் பிரவின் கழுத்தை கடிக்க பிரவின் கழுத்தில் ரத்தம் தண்ணிரை போல வந்தது. இறுதியில் பைரவன் இறந்து போனது.
இறந்து போன பைரவனை கிழே போட்ட  அந்த உருவங்கள் அடுத்து அரவிந்தை பார்த்தனர். அரவிந்த் திடுகிட்டான். இம்முறை இரண்டு உருவங்களும் அரவிந்தை நோக்கி வேகமாக வந்தனர். பொம்மு ஓடி அரவிந்த் பக்கம் ஓடி வந்தாள்.
“படார்!” என்ற சத்தத்துடன் ஒரு கழுகு பறந்து வந்து அந்த உருவங்களை தாக்கியது. அரவிந்தும் பொம்முவும் அதிர்ச்சியில் மேலே கண்டனர். அவர்களை காப்பாற்ற ஒரு கழுகு கூட்டமே அங்கு விரைந்து வந்தது. அந்த இரண்டு உருவங்களையும் அந்த கழுகுகள் மாறி மாறி தாக்க ஆரம்பித்தனர். அந்த உருவங்கள் தப்பிக்க முடியாமல் அங்கேயே இறந்து போயின.
ஒரு கழுகு இறந்து போன பைரவனை தூக்கிகொண்டு முன்னே பறந்து சென்றது. இரண்டு கழுகுகள் பொம்முவையும் அரவிந்தையும் தூக்கி கொண்டு அந்த முதல் கழுகை தொடர்ந்தனர். மற்ற கழுகுகள் பின்னே தொடர ஆரம்பித்தனர்.
அரவிந்துக்கும் பொம்முவும் ஒன்றும் புரியவில்லை. மின்னல் நேரத்தில் நடந்த அதிர்ச்சியில் அவர்கள் வாயடைத்து காணப்பட்டனர். அந்த கழுகுகள் மிக உயரத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தனர். அங்கே ஒரு மிக உயர்ந்த மலையின் உச்சியை நோக்கி அவை பறந்து கொண்டிருந்தன. அந்த உச்சியில் ஒரு மிகப்பெரிய கோபுரம் இருந்தது. அந்த கோபுரத்தை பார்க்கும்போதே அது ஒரு கோவில் என்று புரிந்தது.
அந்த கழுகள் கோவிலின் வெளியே பரந்த பாறை இடத்தில் அரவிந்தையும் பொம்முவையும் விட்டு சென்றன. அந்த இறந்த போன பைரவனின் உடலை மட்டும் அந்த கழுகுகள் எங்கோ தூக்கி சென்று விண்ணில் மறைந்தன. அந்த கழுகுகள் எதற்காக தங்களை காப்பாற்ற வேண்டும்? பைரவனின் உடலை மட்டும் அவைகள் ஏன் எடுத்து செல்ல வேண்டும் ? என்று பல கேள்விகள் பொம்முவின் மனதில் ஓடின. பொம்முவும் அரவிந்தும் சுற்றி சுற்றி பார்த்தனர். அந்த கோவிலின் பெரிய கதவு மூட பட்டிருந்தது. அந்த பழமையான கோவிலை பார்க்கும் போதே அது நீண்ட வருடமாக மூட  பட்டிருப்பது அவர்களுக்கு தெரிந்தது. பொம்முவும் அரவிந்தும் சுற்றி பார்க்கும் போது. கண்ணுக்கெட்டியதூரம்  மலைக்கு கிழே காடுதான். அதோடு அந்த உலகமே சூரிய வெளிச்சத்தை முழுதாக கண்டதில்லை என்பதுபோல் வானம் எப்போதும் கருப்பு மேகங்களால் சூழ்திருந்தது.
“பொம்மு ....அங்க பாரு...” என்று ஓரிடத்தை பொம்மு காட்ட அங்கே அரவிந்த் பார்த்தான். அங்கே ஒரு ஒரு பாறையாலான நுழைவாயில் போன்ற ஒன்றில் பெரிய ஆலயமணி தொங்கிக் கொண்டிருந்தது. பொம்முவும் அரவிந்தும் அதன் அருகில் சென்றனர். கோவிலை போலவே அந்த ஆலய மணியிலும் நிறைய தூசி படிந்திருந்தது.
“என்ன?” – அரவிந்த்.
“இந்த மணிய அடிச்சு பாப்போம் ! யாரவது பக்கத்தில இருந்த இங்க வருவாங்க” – பொம்மு.
“எனக்கு அப்படி ஒன்னும் தோணலை...இந்த இடம் பல  வருஷமா இப்படியே தான் இருக்கு போல..” – அரவிந்த்.
பொம்மு அந்த ஆலயமணியின் கயிற்றை பிடித்து அசைக்க ஆலயமணியின் சத்தம் பயங்கரமாக கேட்டது.
திடீரென அந்த சத்தத்தை விட பெரிய சத்தத்துடன் அந்த கோவில் கதவு மெல்ல திறந்தது. பொம்முவும் அரவிந்தின் சற்று தயங்கியபடி கோவிலை கண்டனர். அங்கிருந்து நிறைய கிராம மக்கள் வெள்யே சந்தோஷமாக ஓடி வந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மிக சந்தோஷத்துடன் ஓடி வந்து பொம்முவையும் அரவிந்தையும் தூக்கி கொண்டாட ஆரம்பித்தனர். பொம்முவுக்கும் அரவிந்துக்கும் ஒன்றும் புரிய வில்லை. அவர்களில் ஒரு கம்பிரமான மனிதர் வந்தார். பெரிய மீசையும் கையில் கம்பையும் வைத்திருந்தார். உடனே பொம்முவையும் அரவிந்தையும் அந்த மக்கள் கிழே மெல்ல இறக்கி விட்டனர்.
“ வணக்கம்! உங்க பேரு என்னனு தெரிஞ்சுக்கலமா?” என்று அவர் கேட்டார்.
“என் பேரு பொம்மு....இவன் பேரு அரவிந்த்” – பொம்மு
“ரொம்ப சந்தோஷம்! என் பெயர் காளியன். இந்த கோவிலோட காவல்காரன். எங்களை காப்பாத்த வந்த உங்களுக்கு நாங்க எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது!” – என்றார்.
“என்ன சொல்றீங்க? நான் காப்பாத்த வந்தேனா?....இல்ல நீங்க தப்பா புரிஞ்சுக்கிடீங்க!” – பொம்மு
“இல்ல இல்ல...எல்லாம் புரிஞ்சுதான் சொல்றேன்! விதிப்படி நீங்க எங்கள காப்பாதிருக்கீங்க! ...காப்பாத்தவும் போறீங்க!” – காளியன்
“நீங்க சொல்றது எனக்கு புரியல!” – பொம்மு.
                                     ***

பொம்முவையும் அரவிந்தையும் கோவிலுக்குள்ளே அந்த கிராம மக்கள் அழைத்து சென்றனர். அங்கே நிறைய சிற்பங்களும் தங்குவதற்கு இடமும் உணவும் நிறைந்திருந்தது. நிறைய பாதைகள் கொண்டிருந்தது. கோபுரத்தின் உச்சியிலிருந்து வரும் ஒளியும் ஆங்காங்கே சுவற்றில் தொங்கி எரியும் தீபந்தங்களும்தான் கோவிலுக்குள்ளே வெளிச்சம் தருகிறது. அந்த சக்தி வாய்ந்த கோவிலில் சிலையாக வாழும் கடவுள் தான் “நிலாராணி”. அழகான அந்த பெண் வடிவம் கொண்ட கம்பிரமான அந்த சிலையை கண்டார்கள். இதனால் தான் அந்த மலையை கூட கிழே காட்டில் உள்ள தியசக்திகளால் நெருங்க முடியவில்லை.
அடுத்ததாக காளியன் பொம்முவையும் அரவிந்தையும் ஒரு ரகசிய சுரங்கப் பாதையில் எங்கோ கூட்டிச்சென்றார்.

“பல வருஷமா நாங்க இந்த கோவிலில தான் இருக்கோம். இன்னிக்கு நீங்க  அடிச்ச மணியோசை தான் எங்கள கொவில விட்டு வெளிய வரவச்சிருக்கு!” – காளியன்.
“என்ன சொல்றீங்க? ஏன் நீங்க கோவிலுக்குள்ள இருக்கணும்?” – பொம்மு.
“எங்க நாட்டு ராஜா மகேந்திரனோட உத்தரவு இது!” – காளியன்
“என்ன சொல்றீங்க? இது நாடா? மலைய சுத்தி எங்க பாத்தாலும் காடுதான் இருக்கு?” – அரவிந்த்
“பல வருஷத்துக்கு முன்னாடி இந்த நாடு பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சு! ஒரு போருக்கு அப்புறம் இப்படி மாறிடுச்சு!” – காளியன்
அந்த சுரங்க பாதையின் ஒரு இருட்டான இடத்தில் சுவர்களில் எதையோ அவர்களுக்கு காண்பித்தார் காளியன்.
“இந்த கோவிலில் வாழ்ந்த துறவிகள் எதிர் காலத்தில நடக்க போறதை இங்க ஓவியங்களா வரைஞ்சுருக்காங்க! நீங்களே அதை பாருங்க!” என்றார் காளியன்.
அந்த சுவற்றில் ஒரு ஓவியத்தில் அழகான நாடு ஒரு சூனியக்காரியால் சூழப்படுங்கின்றது. அதையடுத்த ஓவியத்தில் அந்த நாட்டு ராஜா அவர்  நாட்டு மக்களை கோவிலுக்குள்ளே அனுப்பி வைத்து போருக்கு செல்கின்றார்.  அடுத்த ஓவியத்தில் ஒரு பொம்மை ஒன்று ஆலய மணியை அடித்து நாட்டு மக்களை கோவிலில் இருந்து வெளியே வரவைக்கின்றது. அடுத்த ஓவியத்தில் கோவில் கோபுரம் நொறுங்கி மலையில் இருந்து விழுகின்றது.
பொம்முவுக்கும் அரவிந்துக்கும் ஓவியத்தை கண்டு ஆச்சர்யம்.
“இதெல்லாம் உண்மையா நடந்து வருதே! ஆனா.....இந்த கோவில் நொறுங்கி அதோட கோபுரம் கிழே விழறது போல வரையப்பட்டிருக்கு!....இது கேட்ட விஷயமா தெரியுதே!” – பொம்மு.
“அத நினைச்சுதான் நானும் இங்க இருக்குற மக்களும் பயந்துகிட்டு இருக்கோம்!” –காளியன்
பொம்முவும்  அரவிந்தும் அமைதி காத்தனர்.
“உங்களுக்கு சேரவேண்டிய கடிதம்...அதை உங்களிடம் தான் குடுக்கனும்னு ராஜா சொல்லி அனுப்பினாரு!” என்று திடிரென்று அவருக்கு நியாபகம் வந்தது.
காளியன் அந்த சுரங்க பாதையின் ஒரு மறைவான இடத்திற்கு அவர்களை கூட்டி வந்தார். அங்கே போர் சமந்தப்பட்ட பொருட்கள் நிறைந்து இருந்தனர். காளியன் அந்த பொருட்களின் நடுவே எதையோ நீண்ட நேர்மை தேடி கடைசியில் ஒரு காகித சுருள் ஒன்றை எடுத்தார்.
“போருக்கு கிளம்பும் முன்னே இந்த கடிதத்தை ராஜா  என்கிட்டே கொடுத்தார். இது உங்களுக்கு சேரவேண்டியது.” என்று காளியன் அந்த கடிதத்தை பொம்முவிடம் கொடுத்தார். பொம்மு அந்த சுருளில் எழுதிருப்பதை அங்குள்ள தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தாள்.
“நிலாயுகத்தின் ராஜாவாகிய நான் எழுதும் கடிதம் இது....இந்த கடிதம் எழுதும்போது நான் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கின்றேன்.சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு யாரோ ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர். அதில் என் நாட்டை அழிக்க ஷானுதா என்னும் ஒரு சூனியக்காரி வரபோகின்றாள் என்றும். அவளின் பயங்கர போற்படையை மோதி ஜெயிக்க சாதாரண மனிதவீரர்களால் முடியாது என்றும் அதில் எழுதியுருந்தது. இதனால் நான் குழப்பத்தில் சிக்கினேன். மனிதர்களை விடம் சக்தி வாய்ந்த போர்ப்படையை உருவாக்க தேடினேன். ஆனால் என்னால் முடியவில்லை.
விரைவில் அவள் இங்கே வருவாள். என் நாட்டை அழிப்பாள். எனது நாட்டு மக்களை மட்டும் அந்த நிலாராணியின் கோவில் பாதுகாப்பில் விடுகிறேன். விதி சொல்வது போல ஒரு பொம்மை என் நாட்டை காப்பாற்ற வரும் என்று நம்புகிறேன். இப்போது கோவிலின் துறவிகளோடு அந்த போரை சந்திக்க செல்கின்றேன்! அந்த போரில் நான் வெல்லலாம் அல்லது இறக்கலாம்!
அந்த கடிதத்தை பொம்மு படித்து முடித்த பின் பொம்மு தான் ஒரு பொறுப்பில் இருப்பதாக உணர்ந்தாள்.
“அப்புறம் ராஜாவுக்கு என்ன ஆகிருக்கும்?” – பொம்மு
“அவர் இறந்திருப்பார்...” – காளியன்
“உங்களோட கடவுள் நிலாராணி ஏன் உங்களை காப்பாத்த வரலை?” – பொம்மு தயத்துடன்.
“அந்த கடவுள் மேல நாம தப்பு சொல்லகூடாது. நிலராணி எதோ ஒரு காரணத்திற்காக அந்த கடவுளும் காத்திருக்காங்க....சீக்கிரம் அது தெரிய வரும்” – காளியன்
“பொம்மு பொம்மு!” என்று வலியுடன் அரவிந்த் திடிரென கத்த உடனே காளியனும் பொம்முவும் அவனை கண்டனர். அவன் காலில் எதோ ஒரு காயம் கருப்பு நிறமாக மாறியிருந்தது. காட்டில் நடந்த போராட்டத்தில் ஒரு காட்டேறி அவன் காலை கடித்திருப்பது அப்போதுதான் அனைவருக்கும் தெரிய வருகிறது.
  என்னாச்சு இது அந்த காட்டேறி கடிச்ச காயம்தான?   ஏன் இது நீலமா மாறியிருக்கு?” என்று பொம்மு பதறியபடி அரவிந்தின் காலை பிடித்து கேட்டாள்.
“என்ன காட்டேரி கடிச்ச காயமா?” – காளியன்
“ஆமா ! இவனும் நானும் காட்டில இரண்டு காட்டேரி கிட்ட மாட்டிகிட்டோம். அதுங்க கிட்ட இருந்து தப்பிக்கும் போது இது நடந்திருக்கு!” – பொம்மு வேகமாக
“அடகடவுளே!” என்று தன் தலையில் கை வைத்தார் காளியன்.
“இந்த காயத்த சரி பண்ணிடலாம்ல?” – பொம்மு.
“காட்டேரியோட கடியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது!   கொஞ்சம் கொஞ்சமா இவன் உடல் முழுவதும் கருப்பாக மாறும்! கடைசில இவனும் ஒரு காட்டேரியா மாறிடுவான்!” என்று காளியன் கூற பொம்முவுக்கும் அரவிந்தின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தன.
“அரவிந்துக்கு இந்த காயம் போகணும்! அதுக்கு வழி சொல்லுங்க!” – பொம்மு
நீண்ட நேரம் யோசித்த காளியன் “ ஒரு வழி இருக்கு! ஆனா அது கை கொடுக்குமான்னு எனக்கு தெரியாது!” என்றார்.
“எதவா இருந்தாலும் சொல்லுங்க “ – பொம்மு
“இந்த நிலாயுகத்தில பலகோடி வருஷம் முன்னே கடவுள் நிலாராணி இந்த மக்களுக்காக இரண்டு  அமிர்தம் நிரம்பிய பானையை மறைச்சு வச்சிட்டு போனாங்களாம். ஆபத்து வரும்போதுதான் அதை உபயோகிக்கனும்னு சொல்லிட்டு போயிருக்காங்க. அந்த அமிர்தம் சாப்பிட்டா எந்த தியசக்தியும் விலகி போகும். அதை கண்டுபிடிபதற்கான வரைப்படத்தை இந்த கோவில் துறவிகள்கிட்ட குடுத்திட்டு போனாங்களாம். அந்த அமிர்தம் தேடி பல திருடர்கள் வந்தாங்க. ஆனால் அவங்களால கண்டுபிடிக்க முடியல. உங்களால அதை கண்டுபிடிக்க முடிஞ்சா ....நீங்க இந்த பையனை காப்பாத்தலாம்....அதுவும் சீக்கிரம் இந்த பையன் காட்டேரியா மாறாம இருக்குறதுக்குள்ள” – காளியன்.
“ஆனா அந்த வரைப்படம் வேணும்....என்னால இந்த ஆபத்தான காட்டில எப்படி சுலபமா கண்டுபிடிக்க முடியும்?” – பொம்மு.
“வரைப்படம் கிடைக்க வாய்ப்பில்லை....அந்த வரைபடத்தை வசிருகறது துரவிகள்தான்....கடைசியா நடந்த போருக்கு அப்புறம் துறவிகள் திரும்பி வரலை....அவங்க இறந்திருக்கணும் “ – காளியன்
“இப்ப நான் எப்படி அதை கண்டுபிடிக்கறது?” – பொம்மு.
“அதுதான் உங்க திறமை பொம்மு “ – காளியன்.

பொம்மு என்ன செய்வது என்று தவித்தாள். வேறுவழியில்லை பொம்மு அரவிந்துடன் அந்த அமிர்த பானையை தேடி செல்ல கிளம்பினாள்.

No comments:

Post a Comment